/* */

பல்லாவரத்தில் மீண்டும் தலை தூக்கிய பேனர் கலாச்சாரம்

பல்லாவரத்தில் மீண்டும் தலை தூக்கிய பேனர் கலாச்சாரம். முதல்வர் உத்தரவை மீறி ஆளும் கட்சியினர் பேனர் வைத்தனர்.

HIGHLIGHTS

பல்லாவரத்தில் மீண்டும் தலை தூக்கிய பேனர் கலாச்சாரம்
X

மீண்டும் பல்லாவரத்தில் தலை தூக்கியது பேனர் கலாச்சாரம்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறுகுறு தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி.மற்றும் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஐ.ஏ.எஸ். ஆகியோர் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றனர். தமிழக முதல்வரின் திட்டமான மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் நூற்றுகணக்கான மக்கள் கோரிக்கை மனுவை அளிக்க வந்ததிருந்தனர்.

இந்தநிலையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் மற்றும் எம்.பியை வரவேற்க்கும் விதமாக பொதுமக்கள் கூடும் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிந்தன. ஏற்கனவே பல்லாவரம் அருகே அரசியல் கட்சியினர் சாலையில் பேனர் வைத்ததில் பேனர் சரிந்து விழுந்து இளம் பெண் சுபாஸ்ரீ உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து உயர்நீதிமன்றமும் பொது இடங்களில் பேனர் வைக்க தடை விதித்துள்ளது. இந்தநிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலினும் பேனர் கலாச்சாரத்தை திமுகவினர் அடியோடு நிறுத்திவிட வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் தமிழக முதல்வரின் வேண்டுகோளையும் மீறி, ஆளும் கட்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியே அமைச்சர் தாமோ அன்பரசனையும், டி.ஆர்.பாலு எம்பியும் வரவேற்று பேனர் வைத்தது சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கட்சியின் தலைமையின் உத்தரவை கூட அரசின் நிகழ்ச்சியில் பின்பற்றாமல் பேனர்கள் வைத்துள்ளது சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். பொது இடங்களில் இது போன்ற பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயத்தை இனியாவது தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள்னர்.

Updated On: 26 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...