பல்லாவரம் அருகே வீட்டில் தீ விபத்து: 2 வயது குழந்தை பலி
பிரிஜிதா
சென்னை பல்லாவரம் அடுத்த கவுல்பஜார், யசோதா நகரை சேர்ந்தவர் சரசு (எ) சங்கீதா(25). இவர் இன்று மாலை தனது வீட்டின் வாசலில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டு இருந்துள்ளார். அவரது 2 வயது குழந்தை பிரிஜிதா, படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டினுள் திடீரென தீப்பிடித்துள்ளது.
தீப்பிடித்த உடன் உள்ளே சென்று குழந்தையை தூக்க தாய் முயன்றபோது தீ மளமளவென பரவியதால் குழந்தையை மீட்க முடியாததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு துறையினரை வரவழைத்தனர். தீயை அணைத்து குழந்தையை பார்த்தபோது கட்டிலோடு குழந்தை முற்றிலுமாக எரிந்து இருந்தது.
தகவல் அறிந்து சென்ற சங்கர் நகர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu