பல்லாவரத்தில் இளைஞர் மீது தாக்குதல்: விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உட்பட 9 பேர் கைது

பல்லாவரத்தில் இளைஞர் மீது தாக்குதல்: விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உட்பட 9 பேர் கைது
X

சென்னை பல்லாவரத்தில் செல்போன் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரை தாக்கிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

செல்போன் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரை தாக்கிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேர் கைது.

செல்போன் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரை தாக்கிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேர் கைது.

சென்னை பல்லாவரம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி(23), இவர் அதே தெருவில் ஐஸ் கடை நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி பொருளாளர் அன்சர்(எ) அணிஷ்(29), கடையில் வேலை பார்த்து வந்தார்.

பாலாஜிக்கு அணிஷ் சம்பள பாக்கி தர வேண்டி இருந்ததால், அதற்காக கடையில் வேலை செய்யும் நபர்களின் செல்போன், 10,500 ரூபாய் ஆகியவற்றை திருடியதாக நினைத்து பாலாஜியை அணிஷ்(29), பாலகுமார்(20), சரத்(29), ராஜேஷ்(29), நிசார் அகமது(24), அபில்ரகுமான்(22), முகேஷ் கண்ணா(19), மாதவன்(19), மனோஜ் குமார்(24), உள்ளிட்ட 9 பேர் சேர்ந்து கட்டையால் சரமாறியாக தாக்கியுள்ளனர். இதில் பாலாஜிக்கு இடதுபக்க மண்டையில் காயமேற்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயால் உடனடியாக, விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!