/* */

கத்தி முனையில் மிரட்டி செல்போன், பைக் பறித்த ஆசாமிகள் கைது

குரோம்பேட்டையில் பட்டாக்கத்தி முனையில் மிரட்டி செல்போன், பைக் பறித்து சென்ற ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கத்தி முனையில் மிரட்டி செல்போன், பைக்  பறித்த ஆசாமிகள் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட வழிப்பறி திருடன்

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையை சேர்ந்தவர் லோகேஷ்(32). இவா் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.லோகேஷ் நேற்று முன்தினம் இரவு நாகல்கேணி அக்கீஸ்வரர் காலனிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

நாகல்கேணி அண்ணா சாலை போலீஸ் பூத் அருகே வந்த போது,மா்ம ஆசாமிகள் 2 போ் பட்டாக்கத்தியை காட்டி,லோகேஷ்சை வழிமறித்தனா்.


பின்பு கத்தி முணையில் மிரட்டி,லோகேஷ்சின் செல்போன்,மற்றும் பைக்கை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.

இதுபற்றி லோகேஷ் சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசாா் ஆய்வு செய்தனா்.

அப்போது வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்டது,பம்மலை சேர்ந்த ஆட்டோ டிரைவா் ஏஜாஸ்(27), மற்றும் அவரது நண்பா் ஜெயசூர்யா(21) என்று தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர்.

ஏஜாஸ் மீது ஏற்கனவே செல்போன் திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந் லோகேஷ்சின் பைக் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.இருவரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Updated On: 23 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்