பல்லாவரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

பல்லாவரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
X

பல்லாவரம் நகராட்சி

பல்லாவரம் நகராட்சியில் லஞ்சஒழிப்பு போலீசாரின் சோதனை நிறைவடைந்தது. 11500 ரூபாய் பணம் இடைத்தரகரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில், ஏ.டி.எஸ்.பி சின்ன ராம் தலைமையில், ஆய்வாளர்கள் அடங்கிய லஞ்ச ஒழிப்பு துறையினர் சுமார் 10க்கும் மேற்பட்டோர் இன்று மாலை, 3 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
நகராட்சியில் அனைத்து பணிகளுக்கும் இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்கப்படுவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனையானது இரவு 10 மணி வரை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது இடைத்தரகர் ஒருவரிடம் இருந்து 11500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அது குறித்து விசாரணை நடைபெறும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!