முதியவரை மீட்டு மகனிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர் ராஜ்குமார்

முதியவரை மீட்டு  மகனிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர் ராஜ்குமார்
X

ஆதாம் நகர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட முதியவர்

பம்மல் நாகல்கேனி, ஆதாம் நகர் பகுதியில் முதியவரை மீட்டு, அவரது மகனிடம் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஒப்படைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த பம்மல் நாககேனி ஆதாம் நகர் பகுதியில், ஆதரவற்ற நிலையில் முதியவர் ஒருவர் படுத்திருபதாக, பம்மல் சங்கர் நகர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த சட்டம் ஓழுங்கு ஆய்வாளர் ராஜ்குமார், விரைந்து சென்று ஆதரவற்ற முதியவரை மீட்டு, குளிப்பாட்டி, புது ஆடைகள் கொடுத்து விசாரித்தார். அப்போது அவர் பெயர் முனுசாமி வயது 70 எனவும் குரோம்பேட்டை ராதாநகர், அகஸ்தியர் தெரு பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து, முதல் நிலை காவலரான அமரதாஸ், முதியவரின் மகனான சரவணனிடம் விசாரணை செய்தபோது, முதியவர் சற்று மனநலம் சரியில்லாததால் யாரிடமும் சொல்லாமல் வெளியே வந்ததாக தெரியவந்தது.

காவல் ஆய்வாளர் ராஜ்குமார், முதியவர் முனுசாமியை அவரது மகனிடம் ஒப்படைத்து அறிவுரை கூறி, நல்லமுறையில் அனுப்பி வைத்தனர். முதியவரை மீட்டு அவரின் மகனிடன் ஒப்படைத்த, பம்மல் சங்கநகர் காவல்துறையினரை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil