பல்லாவரத்தில் ராட்சத விளம்பர பேனர்களால் விபத்து அபாயம்: மாநகராட்சிக்கு கோரிக்கை

பல்லாவரத்தில் ராட்சத விளம்பர பேனர்களால் விபத்து அபாயம்: மாநகராட்சிக்கு கோரிக்கை
X

விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் ராட்சத விளம்பர பேனர்.

பல்லாவரத்தில் ராட்சத விளம்பர பேனர்களால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலை, பெரிய ஏரியில் உரிய அனுமதி பெறாமல் ராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் கன மழையின் காரணமாக விளம்பர பேனர் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.

காற்றில் பறந்து தொங்கிக் கொண்டிருக்கும் கிழிந்த பேனர் ரேடியல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மேல் விழுந்தால் பெரும் விபத்து எற்படும் அபாயம் உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இதே ரேடியல் சாலையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனரால் உயிரிழந்தந்து குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜி.எஸ்.டி.சாலையிலும் இராட்சத பேனர் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. நீதிமன்ற தடை ஆணை இருக்கும் பட்சத்தில் இராட்சத விளம்பர பேனர்களை தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி