அடகு கடையில் நகை வாங்குவது போல் நடித்து 30 சவரன் நகை அபேஸ் செய்த வாலிபர்

அடகு கடையில் நகை வாங்குவது போல் நடித்து 30 சவரன் நகை அபேஸ் செய்த வாலிபர்
X
திருட்டு போன நகை அடமான கடை
அடகு கடையில் நகை வாங்குவது போல் வந்து 30 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் பல வருடங்களாக அடகுகடை, மற்றும் நகை விற்பனை கடையை நடத்தி வருபவர் கமலேஷ் ஜெயின், இவரது கடைக்கு நகை வாங்குவது போல் வந்த இளைஞர் ஒருவர் தங்கச் சங்கிலி வேண்டும் என கேட்க அவரும் கடையில் இருந்த செயின்களை காண்பித்துள்ளார்.

செயினின் மாடல் பிடிக்க வில்லை என கூறிய இளைஞர், வேறு செயினை காண்பிக்க கேட்டுள்ளனர். இதனால் கமலேஷ் ஜெயின் தெரிந்தவரின் நகை கடையில் இருந்து 5 தங்கச் சங்கிலியை எடுத்து வந்து காண்பித்துள்ளார்.

அதனை வாங்கி பார்த்துக் கொண்டிருந்த போதே நகைக்கடைகாரரின் கவனத்தை திசை திருப்பி, கண்ணிமைக்கும் நேரத்தில் 30 சவரன் மதிப்புள்ள, 5 தங்க சங்கிலியையும் எடுத்துக் கொண்டு, வெளியில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபருடன் தப்பிச் சென்றார். சம்பவம் தொடர்பாக கமலேஷ் ஜெயின் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்