சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர் போராட்டம்

சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர் போராட்டம்
X

ஆலந்தூர் தொகுதியில் சாலை வசதி வேண்டி  மக்கள் சாலையில் அமர்ந்து இருளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்று தலைமுறையாக மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை துண்டித்ததைக் கண்டித்து ஏராளமான மக்கள் தொடர் போராட்டம்

சென்னை, ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட நந்தம்பாக்கத்தில் கணபதி நகர், துளசி நகர், உக்ரித்கவுண்ட் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் குடும்பத்திற்கு மேற்ப்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மூன்று தலைமுறயாக 60 ஆண்டுகாலமாக அப்பகுயில் உள்ள சாலையை பொதுமக்கள் சாலையை பயன்படுத்தி வந்த நிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் திடீரென முன் அறிவிப்பு இன்றி சாலையை துண்டித்ததால் அப்பகுதி மக்கள் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வர இயலாத நிலை உள்ளதாகவும், மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்ல இது முக்கிய சாலையாக பயன்படுத்துவதாகவும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும், மயானம் செல்ல சாலை வேண்டும் எனவும் இந்த துண்டிக்கப்பட்ட சாலையை தமிழக அரசு உடனடியாக சீர் செய்து தரகோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் வரவில்லை :

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக திடீரென முன்னறிவிப்புமின்றி சாலையை துண்டித்தால், அப்பகுதி மக்கள் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் செல்ல இயலாத நிலையில் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல பஸ்சில் ஏற முடியாத காரணத்தாலும், சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து ஆறு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் வராததால், பகுதி மக்கள் இருளில் அமர்ந்து செல்போன் வெளிச்சத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

Next Story
அடுத்த புது மொபைல் வந்துருச்சு இத பாருங்க !!ரியல்மி 14X மொபைல் வரப்போகுது!