பழைய பல்லாவரத்தில் விளையாட்டு திடலை தானமாக கொடுத்தவருக்கு நினைவுத் தூண்

பழைய பல்லாவரத்தில் விளையாட்டு திடலை தானமாக கொடுத்தவருக்கு நினைவுத் தூண்
X

பழைய பல்லாவரம் பகுதியில் விளையாட்டு திடலை தானமாக வழங்கிய வள்ளல் துரைக்கண்ணுவுக்கு விளையாட்டு வீரர்கள் நினைவுத் தூண் அமைத்தனர்.

பழைய பல்லாவரம் அம்பேத்கர் விளையாட்டு திடலை தானமாக கொடுத்த வள்ளல் துரைக்கண்ணுவுக்கு நினைவுத் தூண் திறக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பல்லாவரம் கவிதா பண்ணை அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடலில் ஏ எப் சி பைந்தமிழ் கால்பந்தாட்ட குழு சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டு திடலை பொது மக்களுக்கும் விளையாட்டு வீரர்களும் பயன்படுத்தி கொள்ள தானமாக வழங்கிய வள்ளல் வி.துரைக்கண்ணு நினைவாக அவரது உருவம் பதித்த நினைவு தூணை திறந்தது.

இந்நிகழ்ச்சியில் சரக்கு மற்றும் சேவை வரி துறையில் துணை ஆணையராக பணிபுரியும் துரைக்கண்ணுவின் மகன் நந்தகுமார் அவர்கள் கலந்துகொண்டு நினைவு தூணை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக டாகடர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொடியேற்றபட்டு மழலை குத்துசண்டை வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கினர் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நந்தகுமார், தன் அப்பாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக இப்படி ஒரு பிரம்மாண்ட தூண் அமைத்ததற்க்காக தன் குடும்பத்தின் சார்பில் ஊர் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் முன்னால் நகரமன்ற உறுப்பினர்கள் மனோகரன், அம்மணிகல்யாணசுந்தரம், மாவட்ட இளைரணி துனைச் செயலாளர் சந்திரசேகர்ராஜா, காவல்துறை உதவி ஆய்வாளர் முருகதாஸ், 17 வது வார்டு இணைச் செயலாளர் பரமேஸ்வரன், பல்லாவரம் அரிமா சங்க தலைவர் அசோக்சபத், முன்னால் பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் நரசிம்மண் உட்பட ஊர் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!