பல்லாவரத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த 4 இளைஞர்கள் கைது

பல்லாவரத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த 4 இளைஞர்கள் கைது
X

பல்லாவரத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞர்கள் கைது.

பல்லாவரத்தில் மன அழுத்த நோயாளிகள் பயன்படுதப்படும் மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்னர்.

பல்லாவரம் அருகே மன அழுத்தம் உள்ள நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகளை மெடிக்கல் ஷாப்பில் போலி மருத்துவ சீட்கள் மூலம் வாங்கி, அவைகளை பல மடங்கு அதிக விலைக்கு போதை மாத்திரைகளாக இளைஞா்களுக்கு விற்பனை செய்த 4 பேரை போலீசாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் உள்ள முட்புதர் பகுதியில் சிலர் ரகசியமாக போதை மாத்திரைகளை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது..இதையடுத்து சங்கா்நகா் போலீசாா் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்தனா்.

அப்போது வெளியூா் இளைஞா்கள் ஓரிருவா் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தனா்.சாதாரண உடையிலிருந்த தனிப்படை போலீசாா் அவா்களை பிடித்து விசாரித்தனா். ஆனால் அவா்கள் தங்கள் நண்பா்களை தேடி வந்ததாக கூறிவிட்டு சென்று விட்டனா்.ஆனாலும் தனிப்படை போலீசாா் அவா்களை தீவிரமாக கண்காணித்து கொண்டிருந்தனா்.

இந்நிலையில் நேற்று அந்த இளைஞா்களில் 2 போ் மீண்டும் அந்த பகுதிக்கு வந்து சுற்றினா்.இதையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் மடக்கி பிடித்தனா்.அவா்களை சங்கா்நகா் போலீஸ்நிலையம் கொண்டு சென்று விசாரனை நடத்தினா். அவா்கள் பம்மலை சேர்ந்த அஜீத்குமார் (24) மற்றும் வினித் (20) என்று தெரிந்தது.அவா்களிடம் விசாரணை நடத்தியபோது,முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.

இதையடுத்து அவா்களை மீண்டும் சா்வீஸ்சாலை,புதா் பகுதிக்கு அழைத்து சென்று விசாரித்தனா்.அப்போது புதா்க்கு அடியில் மண்ணில் புதைத்து வைத்திருந்த மாத்திரைகளை கைப்பற்றினா்.30 மாத்திரைகள் கொண்ட 3 அட்டைகளை பிளாஸ்டிக்கவரில் சுற்றி புதைத்து வைத்திருந்தனா்.மேலும் அவா்களிடம் விசாரித்ததில்,இதற்கு உடைந்தையாக இருந்ததாக குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த கவுதம் (19) மற்றும் பல்லாவரத்தை சேர்ந்த அரவிந்த் குமார் (20) ஆகியோரையும் கைது செய்தனா்.

அதன்பின்பு கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில்,மன அழுத்தம் உள்ள நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகளை,மருத்துவா்களின் போலியான சீட்டுகள் தயாரித்து,அதை காட்டி மெடிக்கல் ஷாப்களில் இந்த மாத்திரைகளை வாங்கியது தெரியவந்தது. 10 மாத்திரைகள் ரூ.30 க்கு வாங்கி,ஒரு மாத்திரையை ரூ.300 க்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

இது போன்ற மாத்திரைகள் மனஅழுத்தம் ,தூக்கமின்மை உள்ளவர்களுக்கும் அரசு மற்றும் தனியார் மருந்தகங்களில் உரிய மருத்துவர் பரிந்துரை மூலம் வழங்கபட்டு வருவதாக தெரிகிறது.

இவா்கள் இதை பல்வேறு மெடிக்கல் ஷாப்களில் வாங்கி,இளைஞா்களுக்கு போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இவா்கள் எந்தெந்த மெடிக்கல் ஷாப்களில் மாத்திரைகளை வாங்கினா்? அதற்கு எந்த டாக்டரின் பரிந்துரை சீட்டுகளை பயன்படுத்தினா்? இவா்களிடம் போதை மாத்திரைகள் வழக்கமாக வாங்கிய வாடிக்கையாளா்கள் யாா்? என்று பல்வேறு கோணங்களில் சங்கா்நகா் போலீசாா் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!