திருநீர்மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் கைது

திருநீர்மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் கைது
X

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய 4 பேர் கைது 

திருநீர் மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, திருமங்கை ஆழ்வார்புரம், இரட்டைமலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(25), இவரது 26வது பிறந்தநாளை நேற்று நள்ளிரவு நண்பர்களோடு கொண்டாடியுள்ளார். அப்போது பிறந்தநாள், கேக்கை 2 அடி நீளமுள்ள பட்டாக் கத்தியால் வெட்டியுள்ளார்.
உடனிருந்த சக நணபர்கள், இதனை வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர். இந்நிலையில் சங்கர் நகர் போலீசார் அந்த வீடியோவை கைப்பற்றி பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய 10 பேரில் உதயகுமார்(25), சேரன்(21), அரசு(19), ரோகித்(27), உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து, கேக் வெட்டிய பட்டாக் கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

கைதான நான்கு பேர் மீது எவ்வித வழக்கு முன்னதாக பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture