பல்லாவரம் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

பல்லாவரம் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு
X

பைல் படம்.

பல்லாவரம் அருகே 2வது மாடியில் தனியே அமா்ந்து டிவி பாாத்து கொண்டிருந்த 3 வயது குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழப்பு.

செங்கல்பட்ட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பொழிச்சலுார் ராஜேஸ்வரி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் முருகன். அவரது 3 வயது குழந்தை சர்வன். நேற்று , வீட்டின் கீழ் தளத்தில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடந்தது.

அதனால், குழந்தையை வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் ‛டிவி' பார்க்க வைத்துவிட்டு, பெற்றோர் இருவரும் பெயிண்ட் அடிக்கும் வேலையை கவனித்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் இரண்டாவது , மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த குழந்தை சர்வன் நிலைதடுமாறி படிக்கெட்டின் கைபிடி வழியாக தவறி கீழே விழுந்தான். இதில் தலையில் படுகாயமடைந்த குழந்தை சர்வனை பெற்றோர் பதறியடித்து கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது.

அதன்பின்பு மேல் சிகிச்சைக்காக, சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி, இன்று மாலை உயிரிழந்தான். இந்த தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!