செங்கல்பட்டு 2வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 13 பேர் போட்டி

செங்கல்பட்டு 2வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 13 பேர் போட்டியிடுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 2வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு புனித தோமையார் மலை பகுதியில் 13 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், சுதாகர், ஜனப்பிரபு ஆகியோர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வேதகிரி, ஜகன்பிரபு ஆகியொர் போட்டியிடுகின்றனர். நாம்தமிழர் கட்சி சார்பில் கோகுலகிருஷ்ணன், தனசேகர் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கண்ணபிரான், ஜெயலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் குமார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாணிக்கம், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேவராஜ் வேலு ஆகிய 13 பேர் போட்டியிடுகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!