செங்கல்பட்டு 1வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 11 பேர் கடும் போட்டி

செங்கல்பட்டு 1வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 11 பேர் போட்டியிடுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு புனித தோமையார் மலை பகுதியில் 11 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பவுல்ராஜா, மனோகர், நாம்தமிழர் கட்சி சார்பில் வேதநாயகம், கருணாநிதி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரதீஷ்குமார், சுரேஷ்பாபு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சடையாண்டி, மக்கள் நீதிமய்யம் சார்பில் சேகர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சந்திரமோகன், மற்றும் சுயேட்சையாக ரத்தினம், குமார், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Tags

Next Story
ai future project