வண்டலூரில் பெண் சிங்கம், 9 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து மர்ம மரணம்: ஊழியர்கள் அச்சம்
நெருப்பு கோழி ( பைல் படம்)
வண்ட லூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை மற்றும் பல்வேறு அரியவகை விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருப்படுகிறது.. கொரோனா தொற்று பரவல் காரணமாக பூங்கா மூடப்பட்டு, தற்போது ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, பொது மக்களின் பார்வைக்கு மீண்டும் திறந்து விடப்பட்டடுள்ளது.
இந்நிலையில், இப்பூங்காவில் இருந்த 35 நெருப்புக் கோழிகளில், கடந்த திங்களன்று ஒரு நெருப்பு கோழி மேய்ந்து கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்து பரிதாபமாக இறந்தது. மறுநாளே மற்றொரு நெருப்புக்கோழி இதே போல் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தது. இது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா டாக்டர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 7 நெருப்புக் கோழிகள் பராமரிப்பு பகுதியில் மேய்ந்து கொண் டிருந்போது அடுத்தடுத்து இறந்தன. அந்த நெருப்புக் கோழிகள் உட்கார்ந்து, சாய்ந்து, அதன் வாயிலிருந்து ரத்தம் வந்த நிலையில் இறந்து விடுவதாக பராமரிப்பு ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் மருத்துவ நிபுணர்கள் விரைந்து வந்தனர். அங்கு இறந்த நெருப்பு கோழிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும், இறந்து போன நெருப்புக் கோழிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன. அவை பறவை காய்ச்சல் பாதிப்பினால் இறந்துள்ளனவா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.35 நெருப்புக்கோழிகள் இருந்த நிலையில், தற்போது 3 நாட்களில் 9 கோழிகள் மர்மமான முறையில் இறந் துள்ளன .
இதையடுத்து நெருப் புககோழி பராமரிக்கப்படும் இடத்தை சுத்தம் செய்து, நோய் தடுப்பு மருந்து அடிக்கும் பணிகளை கால்நடை மருத்துவ ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர, மற்ற நெருப்பு கோழிகளுக்கும் பறவைகாய்ச்சல் உள்பட வேறு ஏதேனும் நோய் உள்ளதா என மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
இந்நிலையில், வண்ட லூர் உயிரியல் பூங்காவில் நீண்ட நாட்களாக உடல்ந லம் பாதிக்கப்பட்ட 22 வயதான பெண் சிங்கம் கவிதா நேற்று பரிதாபமாக இறந்தது. இந்த பெண் சிங்கம் ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உடல் நலம் தேறியது.
தற்போது வயது மூப்பினால் அந்த பெண் சிங்கம் இறந்ததாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.பெண் சிங்கம் இறப்பு, 9 நெருப்பு கோழிகளின் அடுத்தடுத்து மரணம் அடைவது, பூங்கா ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu