இருளர் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது

இருளர் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட இளைஞர்

செங்கல்பட்டு மாவட்டம் கவாத்தூரில் இருளர் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கவாத்துர் ஊராட்சிக்குட்பட்ட மந்தைவெளி தெருவில் 20 க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் கடந்த சில வருடங்களாகவே இருளர் இன மக்களை மிரட்டுவது ஆபாசமாக திட்டுவதும் என தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளியன்று இரவு இருளர் குடியிருப்பை சேர்ந்த லலிதா என்ற பெண் தன் கணவர் மார்த்தாண்டம் மற்றும் குழந்தைகளுடன் அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது புருஷோத்தமன் லலிதாவின் காலை பிடித்து இழுத்துள்ளார்.

இதை அறிந்த லலிதா கூச்சலிட்டுள்ளார்.மனைவி கூச்சலிடுவது கண்டு மார்த்தாண்டம் வீட்டிலிருந்த வெளியே வந்து பார்த்துள்ளார் அப்போது புருஷோத்தமன் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் மார்த்தாண்டத்தை கொலை வெறியுடன் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் தன் கணவரை காப்பாற்றும்படி லலிதா தன் அருகில் உள்ள வீட்டில் பாரதி என்பவரை உதவி உதவிக்கு அழைத்துள்ளார். தன் கணவனை காப்பாற்றும்படி கதறி உள்ளார் சம்பவ இடத்திற்கு வந்த பாரதி மயக்கம் அடைந்து கிடந்த மார்த்தாண்டத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க 108 அவசர ஊர்தியை அழைத்துள்ளார்.

இதை அறிந்த புருஷோத்தமன் நீ யாருடா ஆம்புலன்சை கூப்பிடுவதற்கு என்று கூறி பாரதியையும் தாக்கியுள்ளார் மேலும் தாக்குதலை தடுக்க சென்ற பாரதியின் தாயாரையும் கடுமையாக புருஷோத்தமன் தாக்கியுள்ளார்.

இதற்குள் ஆம்புலன்ஸ் வரவே அடிபட்ட வர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் தகவலறிந்து வந்த சித்தாமூர் காவலர்கள் புருஷோத்தமனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இருளர் மக்களிடம் கேட்டபோது தொடர்ந்து தங்களை மிரட்டுவதும் எதிர்த்துப் பேசினால் பெண்கள் என்றும் பார்க்காமல் ஆபாசமாக திட்டுவதுடன் கடுமையாக தாக்குவதை வழக்கமாக வைத்து இருப்பதாக தெரிவித்தனர்

மேலும் இப்பகுதியில் வாழ்வதற்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!