பெண்கள் சமூக பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் பெண்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனதின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் முனைவர் கல்பனா சங்கர் மற்றும் தலைவர் சீனிவாசன் ஆலோசனையின் படியும் மோசஸ் சாமுவேல் வழிகாட்டுதலின்படியும் பிரபாகரன் மேற்பர்வையின் படியும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் மதுராந்தகம் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் அடங்கிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஊராட்சி மன்ற செயலாளர்கள் ஆகியோர்களுக்கு பஞ்சாயத்து ராஜ்யம் அரசு திட்டங்கள் பெண் உரிமைகள் மற்றும் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின் முதலாவதாக இன்பநாதன் பயிற்சி மேலாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். பெண்கள் சிறு தொழில் செய்து வாழ்வாதார மேம்பாடு அடைவது பற்றி ஜெய்சங்கர் என்டர்பிரைஸ் மேனேஜர் பேசினார். விழிப்புணர்வு பயிற்சி முதல்கட்டமாக அரசு நலத் திட்டங்கள் பற்றியும் பஞ்சாயத்து ராஜ்யம் பற்றியும் மோசஸ் சாமுவேல், சிவகுமார், திருநாவுக்கரசு, சாய்ராபானு, பயிற்சி கொடுத்தார்கள், இப்பயிற்சியை வழங்கிய ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் பங்கேற்பாளர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.
இது போன்ற அரசு நலத் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி தங்களுடைய கிராமத்திலுள்ள மக்களுக்கும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். இப்பயிற்சி நடைபெறுவதற்கு நாராயணசாமி, ஜெயலட்சுமி, மஞ்சுசீதா, ஓவியா, அனிதா, சௌமியா, மனோகர், ஷாலினி மானநீகை ஆகியோர் நிகழ்ச்சி நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu