ஊரை சுற்றினால் கொரோனா பிடிக்குதோ இல்லையோ, நாங்க பிடிப்போம்: காவல்துறை
மதுராந்தகத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
அதில், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் முகக்கவசம் இல்லாமல் வெளியே சுற்றித் திறிந்த இளைஞர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். அவருடைய இந்த நிலை தங்களுக்கும் வேண்டுமா? இந்த நோய் என்பது மிகப்பெரிய கொடிய நோய் அல்ல. இதை நீங்கள் எளிதில் விரட்ட அரசு கூறியுள்ள அறிவுரைகளை பின்பற்றினாலே போதும், தொற்றை விரட்டி அடிக்கலாம்.
பொதுமக்களின் அனாவசியமாக தேவை இல்லாமல் சுற்றி திரிவது, முகக்கவசம், சமூக இடைவெளி இல்லாமலும் பழகுவது போன்றவற்றால் தான் இந்த தொற்று அதிகரிக்கிறது. இவை எல்லாவற்றையும் தவிர்த்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
அரசுக்கும் காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இன்று முதல் தமிழகத்தில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு போடப்பட்டு உள்ளது. அதையும் மீறி சுற்றி திரிந்தால் உங்களை கொரோனாபிடிக்கிறதோ இல்லையோ காவல்துறை பிடிக்கும் என எச்சரித்தனர்.
இந்நிகழ்வில் மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் கவிநா தலைமை தாங்கி விழிப்புணர்வு உரையாற்றினார். மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu