மதுராந்தகம் ரயில்வே தண்டவாளத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்

மதுராந்தகம் ரயில்வே தண்டவாளத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
X

மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீர்

மதுராந்தகம் ரயில்வே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் அனைத்து ரயில்களும் இப்பகுதியில் மெதுவாக இயக்கப்படுகின்றது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் சாலையில் பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக ரயில்வே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் வரும் அனைத்து ரயில்களும் இப்பகுதியில் மெதுவாக இயக்கப்படுகின்றது.

அதுபோல மதுராந்தகம் மாம்பாக்கம் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சூனாம்பேடு பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஏரி சாய்ராம் நகர் மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் மழைநீர் அனைத்தும் ரயில்வே தண்டவாளத்தில் தேங்கி இருப்பதால் இப்பாதை வழியாக வரும் அனைத்து ரயில்களும் மெதுவாக இயக்கப்படுகின்றனர்.

மதுராந்தகத்தில் நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்த கன மழையால் மதுராந்தகம் சுற்றிலும் பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
the future of ai in healthcare