/* */

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்களுக்கு தண்ணீர் உணவு கட் பரபரப்பு

அச்சிறுப்பாக்கம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தண்ணீர் உணவு வழங்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்களுக்கு  தண்ணீர் உணவு கட் பரபரப்பு
X

அச்சிறுபாக்கம் வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசிதிகள் இன்றி தவிக்கும் தேர்தல் பணியாளர்கள்.

செல்லப்பட்டு மாவட்டத்தில் நடந்த முடிந்த 8 ஊராட்சி ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அச்சிறுப்பாக்கம் அரசினர் பெண்கள் பள்ளியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு இன்று காலை 6 மணிக்கு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.இவர்களுக்கு இதுவரையில் இரண்டு மணி நேரங்கள் ஆகியும் உணவு தண்ணீர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தற்போது வாக்கு எண்ணிக்கை துவங்கி உள்ளதால் அனைவரும் பசியோடு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வாக்கு எண்ணிக்கையை துவங்கியுள்ளனர்.

மேலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மாவட்ட தேர்தல் அலுவலர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  6. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  7. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  9. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  10. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!