மதுராந்தகம் ஒன்றியக்குழு வார்டு பெண் உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை

மதுராந்தகம் ஒன்றியக்குழு  வார்டு பெண் உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை
X

ரேணுகா

மதுராந்தகம் ஒன்றியக்குழு 15வது வார்டு சுயேட்சை பெண் உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியை சேர்ந்த மதுராந்தகம் ஒன்றிய சுயேட்சை 15வது வார்டு கவுன்சிலர் ரேணுகா, இவர் மதுராந்தகம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் செந்தில்நாதன் (47) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

கடந்த உள்ளாட்சித்தேர்தலில், அதிக வட்டிக்கு கடன் பெற்று தேர்தலில் போட்டியிட்டதாகவும் கடனை கொடுத்தவர்கள் வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்த நிர்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன் - மனைவி இவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், பாக்கம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ரேணுகா, இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து, மதுராந்தகம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கடந்த அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு, 15வது வார்டில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!