விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை தாக்கியவர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை தாக்கியவர் கைது
X

அச்சிறுப்பாக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை அடுத்த பாபுராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.இவரது கூட்டணியை சேர்ந்த திமுக வேட்பாளர் மல்லை சத்யா விற்கு ஆதரவாக கிராமம் கிராமமாக கட்சியினருடன் வாக்கு சேகரிக்க சென்றார். அப்பொழுது, அதே கட்சியைச் சேர்ந்த எடிசன் (38) என்பவர் கட்சியில் அவருக்கு ஒன்றிய செயலாளர் பதவி தராத காரணத்தினால் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வத்திடம் தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.இதுகுறித்து ஒன்றிய செயலர் பன்னீர்செல்வம் அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், எடிசனை விசாரித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags

Next Story
ai applications in future