மதுராந்தகம் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்

.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு புறவழி சாலையில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விழுப்புரம் மாவட்டம் விழுதம் கிராமத்தைச் சேர்ந்த செல்லகுமார் வயது(47) என்பவர் சம்பவ இடத்தில் பலியானார்.

அதேபோல் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்மீது டிராக்டர் மோதியதில் டிராக்டர் தலை குப்புறக் கவிழ்ந்ததில் அதன் ஒட்டுநர் இரும்புலி கிராமத்தை சேர்ந்த மாரி வய்து(45) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த இரு விபத்து குறித்தும் மதுராந்தகம் மற்றும் அச்சிறுபாக்கம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!