தூய்மை பணியாளர்களுடன் துப்புரவு பணியில் ஈடுபட்ட பேரூராட்சி உறுப்பினர்

தூய்மை பணியாளர்களுடன் துப்புரவு பணியில் ஈடுபட்ட பேரூராட்சி உறுப்பினர்
X
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி உறுப்பினர் வார்டு சுத்தம் செய்யும் பணியில் தானும் களமிறங்கினார்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 3வது வார்டு கவுன்சிலராக ரவிக்குமார் என்பவர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று அவர் வார்டுக்குட்பட்ட பகுதியான ஓம்சக்தி நகர், வரதாரெட்டி நகர், தேசிய நெடுஞ்சாலை, உள்ளிட்ட பகுதிகளில் நோய் தோற்று ஏற்படாத வகையில் துப்புரவு தூய்மை பணியாளர்களுடன் இணைந்து அப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளையும் கழிவுநீர் வெளியேற்றும் பணியை அவரே முன்வந்து தீவிரம் காட்டி வேலை செய்து வருகிறார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா