அச்சிறுபாக்கம் அருகே வேட்டைக்கு சென்ற நரிக்குறவரின் துப்பாக்கியை பிடுங்கி, சுட்டுவிட்டு இளைஞர்கள் தப்பி ஓட்டம்

அச்சிறுபாக்கம் அருகே வேட்டைக்கு சென்ற நரிக்குறவரின் துப்பாக்கியை பிடுங்கி,  சுட்டுவிட்டு இளைஞர்கள் தப்பி ஓட்டம்
X

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் அருகே சிறுக்கரணை நரிக்குறவர் குடியிருப்பு (பைல் படம்)

அச்சிறுபாக்கம் அருகே வேட்டைக்கு சென்ற நரிக்குறவரின் துப்பாக்கியை பிடுங்கி, சுட்டுவிட்டு இளைஞர்கள் தப்பி ஓடினர்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் அருகே சிறுக்கரணை நரிக்குறவர் குடியிருப்பு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் முயல், காடை, கௌவுதாரி, உள்ளிட்ட பறவைகளை பிடித்து விற்பது.

அதிகாலை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியிலிருந்து முத்து என்ற நரிக்குறவர் கோட்டைபுஞ்சை கிராம பகுதியில் வேட்டைக்கு சென்று உள்ளார்.

அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் அவரை அடித்து துன்புறுத்தி அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பிடுங்கி அவரையே சுட்டு விட்டு நாட்டு துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ஓடி விட்டனர்.

நரி குறவர் முத்து ஆபத்தான நிலையில் இருந்த அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மேலும் இது குறித்து நரிக்குறவர் தாக்கிய நபர்களை பிடிக்க வேண்டும் மற்றும் அவருடைய நாட்டு துப்பாக்கியை கைபற்றிய தரவேண்டுமென நரிக்குறவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் நரி குறவர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!