/* */

ஈசூர் - வல்லிபுரம் இடையிலான பாலாற்று தடுப்பணை நிரம்பியது

ஆற்றின் இரு கரைகளில் பல கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள், கிணறுகள், நீர் நிலைகள் நீர் மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

ஈசூர் - வல்லிபுரம் இடையிலான பாலாற்று தடுப்பணை  நிரம்பியது
X

நிரம்பி வழியும் ஈசூர் - வல்லிபுரம் இடையிலான பாலாற்று தடுப்பணை 

செங்கல்பட்டு மாவட்டம், ஈசூர் - வல்லிபுரம் இடையே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் மழைநீர் நிரம்பியுள்ளது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு அருகே உள்ள பாலாறு, பல்வேறு கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஆற்றில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மழை காலங்களில் 3 மாதங்கள் வரை தண்ணீர் சென்றபடி இருக்கும். இதனால், கரைகளின் இருபுறங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் குறையாமல் இருந்தது.

ஆனால், தற்போது அந்த நிலை முற்றிலும் மாறி, மழை காலங்களிலும், பாலாறு வறண்டு மணல் பகுதியாக பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. சில இடங்களில் மட்டும், ஓடையில் செல்லும் தண்ணீரை போல சிறிதளவு தண்ணீர் உள்ளது. கோடைக் காலங்களில் ஆங்கங்கே குளம்போல் காணப்பட்டது. கடந்த ஆண்டு நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது. இதனால், இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்தது. மேலும், ஆற்றின் இரு கரையோரம் வாழும் பல்வேறு கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையொட்டி, தண்ணீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.

மதுராந்தகம் ஆர்டிஓ மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் அடிக்கடி மனுக்களை அளித்தனர். இந்நிலையில், ‌‌‌‌‌‌ஈசூர், வல்லிபுரம் இடையில் பாலாற்றின் குறுக்கே சுமார் 750 மீட்டர் நீளத்துக்கு 5 அடி உயரத்தில் ₹30 கோடி செலவில் தடுப்பணை கட்டும் பணி கடந்த 2018 பிப்ரவரி மாதம் தொடங்கி 2019ல் முடிந்தது. இதைதொடர்ந்து, தற்போது, இப்பகுதியில் பெய்து வரும் மழையால், தடுப்பணை முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.தடுப்பணை அமைந்துள்ள பகுதியில் இருந்து, அதன் பின் பக்கவாட்டில் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஈசூர், பூதூர், பள்ளிப்பட்டு ஆகிய கிராமங்கள் வரை சுமார் 3 கிமீ தூரத்துக்கு பாலாற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலாற்றில் இவ்வளவு தண்ணீர் இருப்பதை தற்போது காண முடிகிறது. இதனால், ஆற்றின் இரு கரைகளில் அமைந்துள்ள பல கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள், சாதாரண பெரிய கிணறுகள், சிறு நீர் நிலைகளின் நீர் மட்டம் உயரும். கரும்பு மற்றும் நெல் விவசாயத்துக்கு பெயர் பெற்ற இந்த பகுதி முன்புபோல விவசாயத்தில் செழிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது என்றனர்.

Updated On: 18 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...