மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து சிலை திருட்டு

மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து சிலை திருட்டு
X
மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து மூன்றடி பெருமாள் கற்சிலை திருடப்பட்டது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கீழாமூர் கிராமத்தில் உள்ள கைகொடுக்கும் பெருமாள் உள்ளது. இக்கோயிலில் நேற்று புரட்டாசி மாத முதல் சனி என்பதால் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் வழக்கம்போல் இரவு கோயிலை பூட்டிச் சென்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு கோவிலின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள், 3 அடி உயரம் உள்ள மூலவர் பெருமாள் கல் சிலையை திருடிச்சென்றுள்ளனர்.

இன்று பிற்பகலில் அவ்வழியே சென்ற கிராம மக்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோயிலில் மூலவர் சிலை மாயமாகி உள்ளதைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மேல்மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story