மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் டிச 18 ல் இன்னுயிர்காப்போம் திட்டம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையிவ் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வருகின்ற டிசம் - 18ஆம் தேதி இன்னுயிர்காப்போம் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க வருகை தருகிறார் அதற்கான முனேற்பாட்டு பணிகள் தொடர்பாகசெய்ய மருத்துவமனைக்கு நேரில் வந்து சுகாதார துறை அமைச்சர் ம.சுப்பரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: வருகின்ற டிச.18-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் இன்னுயிர்காப்போம் திட்டமான நம்மை காக்கும் 48 மணிநேர சேவை என்கிற மருத்துவ திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதில் தமிழகத்தில் எந்த சாலையில் விபத்து ஏற்ப்பட்டால் அவர்கள் உயிர்காக்கும் திட்டமாக இந்த திட்டம் எந்த நாடு எந்த மாநிலம் எந்த மாவட்டமாக இருப்பவராக இருந்தாலும் அவர்கள் உயிரை காப்பாற்று நல்ல திட்டமாக இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் 610 மருத்துவமனைகள் இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை 205 தனியார் மருத்துவமனை 405 ஆகும். இத்திட்டம் அதேநாளில் மாநிலம் முழுவதும் தொடங்கப்படும். இதில் முதல் உதவியாக ஒரு லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் செலவை அரசே ஏற்கும். விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பவருக்கு ஊக்கத்தொகை 5 ஆயிரம் அளிக்கப்படும் என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu