/* */

எஸ்.ஆர்.எம்.வேளாண் கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

எஸ்.ஆர்.எம்.வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

எஸ்.ஆர்.எம்.வேளாண் கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழல்  விழிப்புணர்வு பேரணி
X
எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பாக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பாபுராயன்பேட்டை எஸ்.ஆர்.எம்.வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி தோட்டக்கலை பயிலுதல் திட்டத்தின் கீழ் 6 மாணவர்கள் கா.சரண், ரா.ரா.குமார், சிரி வல்லப், த.ராகுல்தர்ஷன், பா.சரண் ராஜ் குமார், த. ஜீவா, ஆகியோர் 2 மாதங்களாக சித்தாமூர் ஒன்றியத்தில் தங்கி விவசாயிகளுக்கு பல்வேறு தோட்டக்கலை நுணுக்கங்களைக் கற்பித்துவருகின்றனர்.

நேற்று சித்தாமூரை அடுத்த கன்னிமங்களத்தில் உள்ள மக்களுடன் மாணவர்கள் "சுற்றுச்சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் பேரணி நடத்தினர்.

இதில் எஸ்.ஆர்.எம்.ஐ சேர்ந்த இறுதி ஆண்டு தோட்டக்கலை மாணவர்கள் மக்களுக்குப் பெண் கல்வி, புவி வெப்ப மயமாதல் மற்றும் தண்ணீர் சேமித்தல் போன்ற மையமான கருத்தை எடுத்துக்கொண்டு, அதைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேரணி நடத்தினர்.

பெண்கள் கல்வி பெறுவது என்பது பாலின வேறுபாடின்றி ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை உரிமையாகும். ஒரு பெண் கல்வி கற்பது என்பது குடும்பமும் தேசமும் கல்வி கற்பதாகும். நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு. வாழ்கைக்கு தண்ணீர் அடிப்படைத் தேவை. அதில் விவசாயத்திற்குத் தண்ணீர் என்பது இன்றியமையாதது. தண்ணீர் சேமிப்பு அல்லது பாதுகாப்பு என்பது இன்றைய அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது.

நீரைச் சிக்கனமாக ஆள்வது மட்டும் நம் கடமையல்ல நீர் ஆதாரத்தைப் பெருக்குவதும் நம் கையில் தான் உள்ளது. நீரின் உபயோகத்தைக் குறைத்து மறுசுழற்சி முறையில் தேவையற்ற நீரைத் தயாரிப்புக்கும், சுத்தம் செய்வதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவோம் என கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 28 Nov 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  5. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  7. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  9. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!