மதுராந்தகத்தில் டாக்டர் லோகியா பிறந்தநாள் படத்திறப்பு

மதுராந்தகத்தில்  டாக்டர் லோகியா    பிறந்தநாள் படத்திறப்பு
X
மதுராந்தகத்தில் சோஷலிஸ்ட் தலைவர் டாக்டர் லோகியா 111வது பிறந்தநாள் படத்திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் உயர்நிலை குழுவின் ஆலோசனை கூட்டம் மதுராந்தகத்தில் நகர மன்ற முன்னாள் உறுப்பினரும் அர்பன் வங்கி முன்னாள் இயக்குனருமான அய்யனாரப்பன் தலைமையேற்று சோஷலிஸ்ட் தலைவர் டாக்டர் லோகியாவின் 111,வது பிறந்த நாள் நிகழ்ச்சியாக அவரது படத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உயர்நிலை குழு நிர்வாகிகள் அய்யனாரப்பன்,ரங்கநாதன், மணவாளன்,ராஜேந்திரன்,சத்தீஸ், ராஜேந்திரன்,முருகன் மற்றும் பலர் பங்குபெற்றனர்.

கொரோனா தொற்று காரணமாக வர இயலாதவர்கள் தங்கள் கருத்துக்களை தொலை அஞ்சல் மூலமாகவும், தொலைபேசிமூலமாகவும் பதிவு செய்தனர்.இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், மத சார்பற்ற சக்திகளை பலப்படுத்தவும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கவும், மதுராந்தகம் தொகுதியில் ம.தி.மு.க.வேட்ப்பாளர் மல்லைசத்தியா அவர்களுக்கு உதய சூரியன்சின்னத்திலும், செய்யூர்தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்ப்பாளர் பனையூர் எஸ்.பாபு அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.


Tags

Next Story