சித்தாமூர் அருகே சாலையில் கழிவுநீர் ஓடும் அவலம், துர்நாற்றம் வீசி, தொற்று பரவும் அபாயம், பொதுமக்கள் அவதி

சித்தாமூர் அருகே சாலையில்  கழிவுநீர் ஓடும் அவலம், துர்நாற்றம் வீசி, தொற்று பரவும் அபாயம், பொதுமக்கள் அவதி
X

செங்கல்பட்டு மாவட்டம் கீழ் மருவத்தூரில் சாலையில் ஓடும் கழிவுநீர்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், கீழ் மருவத்தூர் ஊராட்சியில் கழிவுநீர் சாலையில் ஓடும் அவலம் உள்ளது, துர்நாற்றம் வீசி, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது, இதனை உடனே சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்மருவத்தூர் ஊராட்சி எஸ்.வி.எஸ் நகரில் கழிவுநீர் கால்வாய் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்மருவத்தூர் ஊராட்சி எஸ்.வி.எஸ்.நகரில் முதல் குறுக்கு தெருவில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சல், போன்ற நோய்கள் உருவாகும் அவலநிலை உள்ளது.

மழை காலத்துக்கு முன்பே கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் நிலை உள்ளதால் வருக்கிற மழை காலத்திற்கு முன் கழிவுநீர் கால்வாயில் இருந்து வரும் மழை நீரும் சேர்ந்து சாலையில் வழிந்து விடும் அபாய நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கீழ்மருவத்தூர் ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil