மதுராந்தகம் அருகே வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் - இருவர் கைது

மதுராந்தகம் அருகே  வெளிமாநில   மதுபாட்டில்கள் பறிமுதல் - இருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

மதுராந்தகம் அருகே, கடத்தி வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பின்னம்பூண்டி கிராமத்தில், தேர்தல் பறக்கும் படையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக, டாடா ஏசி வாகனத்தில், பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட வெளிமாநில 500 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.

மதுபாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த சூர்யா, பூபாலன், ஆகிய இருவரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பந்தமாக அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story