மதுராந்தகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி விற்பனை செய்த டாஸ்மாக் கடைக்கு சீல்

மதுராந்தகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி விற்பனை செய்த டாஸ்மாக் கடைக்கு சீல்
X

அரசு மதுபான கடை ( பைல் படம்)

மதுராந்தகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி விற்பனை செய்த டாஸ்மாக் கடையை ஆர்டிஓ மூடி சீல் வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் இன்று திடீரென மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது கடையில் வாடிக்கையாளர் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் ஒருவரை ஒருவர் முண்டிக் கொண்டு மது வாங்கி வந்தனர்.

விற்பனையாளர்கள் கொரோனா விதிமுறைகளை மீறி விற்பனை செய்து வந்ததாக கூறி கடையை மூடி சீல் வைத்தார். மேலும் மதுராந்தகத்தில் உள்ள மற்ற மது கடைகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!