வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ 5 லட்சம் மதிப்பிலான புடவைகள் சிக்கியது

வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ 5 லட்சம் மதிப்பிலான புடவைகள் சிக்கியது
X

பைல் படம்

அதிமுக சார்பாக ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைத்திருந்த ரூ 5 லட்சம் மதிப்பிலான புடவைகள் சிக்கியது.

செங்கல்பட்டு மாவட்டம். அச்சிறுப்பாக்கம் அடுத்த கடமலைபுத்தூரில் அச்சிறுப்பாக்கம் மற்றும் மதுராந்தகம் தேர்தல் பறக்கும் படைபிரிவினர் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஒரு வீட்டில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை செய்தனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ ஐந்து லட்சம் மதிப்பிலான உயர்ரக புடவைகள் சிக்கியது.

அதிமுக சார்பாக ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக நிர்வாகி எடையாளம் ராஜன் என்பவருக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!