தூய்மைப் பணியாளர்களுக்கு ரோட்டரி சங்கத்தினர் பொங்கல் புத்தாடை வழங்கல்

தூய்மைப் பணியாளர்களுக்கு ரோட்டரி சங்கத்தினர் பொங்கல் புத்தாடை வழங்கல்
X

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பொங்கல் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அச்சிறுப்பாக்கம் ரோட்டரி சங்கம் சார்பில் பொங்கல் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அச்சிறுப்பாக்கம் ரோட்டரி சங்கம் சார்பில் பொங்கல் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் விழாவை முன்னிட்டு 48 நபர்களுக்கு அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் வளாகத்தில் புதிய ஆடைகள் வழங்கினர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்திராக Rtn.PP.R.ரமேஷ் (Happy village chairman), கௌரவ விருந்தினர்களாக Rtn.T.K.சண்முகசுந்தரம் AG, Dr.K.S.விஜயகுமார் கால்நடை உதவி மருத்துவர் சோத்துப்பாக்கம், பேரூராட்சி செயல் அலுவலர் டி.ஜி.எழிலரசன் கலந்துகொண்டனர். ரோட்டரி சங்க தலைவர் கா.பாபு தலைமை தாங்கி நடத்தினார்.

இதில் செயலாளர் ராமமூர்த்தி நன்றியுரையாற்றினார், பொருளாளர் டாக்டர் ஜாகிர்உசேன் மற்றும் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், செயலாளர் பொருளாளர், மற்றும் வரும் ஆண்டின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture