ரோட்டரி சங்கம் - அட்டாமா மருத்துவக்குழு இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்

ரோட்டரி சங்கம் - அட்டாமா மருத்துவக்குழு இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
X
இயற்கை நல முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 120 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஓங்கூர் கிராமத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் அட்டாமா மருத்துவக்குழு ஒருங்கிணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது.

ஓங்கூர் கிராமத்தில், அச்சிறுபாக்கம் ரோட்டரி சங்கமும் செங்கை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அட்டாமா மருத்துவ குழுவும் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில், அக்குபஞ்சர், யோகா, வர்மா, இயற்கை நல மூலிகை என மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் 120 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இதில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு இலவசமாக மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டது. முகாமில் அச்சிறுப்பாக்கம் ரோட்டரி சங்க தலைவர் க.பாபு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக உதவி ஆளுநர் டி.கே.சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றி முகாமைத் துவக்கி வைத்தார்.

திருக்கழுக்குன்றம் முன்னாள் தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். இம்முகாமில் ரோட்டரி சங்க பொருளாளர் டாக்டர் ஜாகிர் உசேன், சங்க செயலாளர் எஸ்.ராமமூர்த்தி ஆகியோர் இறுதியாக நன்றியுரை கூறினார்கள். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவங்களா நீங்க?..அச்சச்சோ..! உடனே அத அவாய்ட் பண்ணுங்க..!