காந்தியடிகள் வருகை தந்த ரயில் நிலையம் மூடல்? போராட தயாராகும் மக்கள்
அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையமும், காந்தியடிகள் அங்கு இறங்கும் புகைப்படமும்
1946ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்த மகாத்மா காந்தி, அந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சிறப்பு ரயில் மூலம் மதுரைக்கு சென்றார். பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அந்த ரயில் காலையில் அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்றது.
அந்த நேரத்தில் மகாத்மா காந்தியை வரவேற்க விடுதலைப் போராட்ட வீரர்கள், பொதுமக்கள் என பலரும் ரயில் நிலையத்தை சூழ்ந்தனர். அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கிய காந்தியை விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தர்கள் வரவேற்றனர். பிறகு ரயில் நிலையத்தை ரயில் நிலையத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்ட காந்தியை அங்கு கூடி நின்ற மக்களுக்கு மத்தியில் கையசைத்தார்.
அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மேடையில் தனது பயணம் குறித்தும் தனக்கு தமிழகத்தை அதிகம் பிடிக்கும் எனவும் கூறி உற்சாகமாக உரையாற்றினார் என ஆ.கோ பண்ணா எழுதிய காமராஜர் ஒரு சகாப்தம் என்ற நூலில் தமிழ்நாட்டில் காந்தி என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தார்..
மகாத்மா காந்தி அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தில் உரையாற்றியதன் நினைவாக அச்சிறுபாக்கம் ரயில் நிலையத்தில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டுமென கோரிக்கையை அப்பகுதி மக்கள் அரசுக்கு முன்வைத்தனர். ஆனால் அது இதுவரை நடக்கவில்லை.
ஆனால், தற்போதைய நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. கொரோனா தொற்று காலத்தில் நாடு முழுவதும் ரயில் நிறுத்தப்பட்டது. அச்சரப்பாக்கத்தில் உள்ள ரயில் நிலையத்தில் முதலில் பயணச்சீட்டு வழங்குவதை நிறுத்திய நிர்வாகம், பின்னர் இரு மார்க்கத்திலும் நின்று சென்ற ரயில்கள் நிற்க விடாமல் செய்தது.
தற்போது நாடு முழுவதும் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தை திறக்க தென்னக ரயில்வே நிர்வாகம் முன்வரவில்லை,மேலும், அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தை முற்றிலும் மூடுவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
அச்சரப்பாக்கம் தற்போது பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த பேரூராட்சியை சுற்றிலும் விவசாயம் சார்ந்த 56 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை இந்த ரயில் நிலையத்தில் நின்று சென்ற திருப்பதி, பாண்டிச்சேரி, வேலூர், கண்டோன்மெண்ட், விழுப்புரம், தாம்பரம், வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.
மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பள்ளி கல்லூரி மருத்துவமனைக்கு தினசரி சென்று வந்தனர். ஆனால் ஊர் மத்தியில் இருக்கும் மரத்தை வெட்ட வேண்டுமானால் முதலில் நிழல்தரும் கிளைகளை வெட்டி விட்டு பின்னர் மரத்தை வெட்டுவது போல் பயணிகாளுக்கு பயணசீட்டு கொடுப்பது முதலில் நிறுத்திவிட்டு பிறகு ரயில் ரயில்கள் நின்று செல்வதையும் ரத்து செய்துவிட்டனர் என வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
தினந்தோறும் ரயில் பயணம் செய்து வந்தவர்கள் தற்போது மேல்மருவத்தூர் ரயில் நிலையத்திற்கு சென்று பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த மகளிடம் கேட்டபோது, அச்சரப்பாக்கம் வரலாற்று மிக்க ரயில் நிலையம் இங்கு நின்று செல்லும் ரெயில்கள் தற்போது நிற்பதில்லை அரசு உடனடியாக தலையிட்டு அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லவும் பயணச்சீட்டு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu