மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் எந்த நேரத்திலும் வெளியேற்ற வாய்ப்பு
மதுராந்தகம் ஏரி உபரி நீர் வெளியேறும் கிளி ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி வெள்ள அபாய எச்சரிக்கை விடும் ஊழியர்கள்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரத்து வினாக்கு 100 கனஅடி தண்ணீர் நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது.
ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்போது 22.9 அடியாக உள்ளது இன்னும் ஏரி நிரம்பி வழிய 4 அங்குலமே நீர்வரத்துவரத்து வர வேண்டியுள்ளது. ஆகவே ஏரி எந்த நேரத்திலும் நிரம்பிவிடலாம். ஏரிக்கு நீர்வரத்து பகுதியான உத்திரமேரூர் மதகு மற்றும் கிளி பாறு மூலம் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஏரி எந்த நேரத்திலும் நிரம்பும் நிலை உள்ளது. இதனுடைய உபரி நீரை கிளி ஆற்று மூலம் வெளியேற்றபடும் கிளியாறு கரையோரம் உள்ள வலது இடது கரையோரங்களில் உள்ள தோட்டநாவல் இருசமணி நல்லூர் கே.கே.புதூர் ஈசூர், முள்ளி, வளர்பிறை, எருக்கஞ்சேரி உள்ளிட்ட 21 கிராம.மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கிளி ஆற்றை கடக்கவோ குளிக்கவோ துணி துவைக்கவோ கால்நடைகளை மேய்க்கவோ அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், மக்கள் பாதுகாப்புடன் கவனமாகவும் இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu