எடையாளம் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

எடையாளம் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
X

எடையாளம் ஊராட்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் பரிசை,  ஊராட்சி மன்ற தலைவர் ஏ.நி.பெருமாள் தலைமையில் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு அருகே, எடையாளம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் ஊராட்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு பரிசு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.நி.பெருமாள் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், 18-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் சிவா, கூட்டுறவு சங்க தலைவர் செல்லகண்ணு, முன்னிலை வகித்தனர். இதில் விற்பனையாளர் வித்யராஜ், மற்றும் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், கலந்து கொண்டனர், மேலும் கிராம பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!