மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
X
செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவதில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனோ வைரஸ் பரவும் இரண்டாம் கட்ட அலையால் மத்திய அரசு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அறிவித்தது.

இதனை செயல்படுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மற்றும் டிஎஸ்பி கவிநா ஆகியோர்களின் உத்தரவுபடி அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் நேற்று இரவு முழுவதும் ஊரடங்கு செயல்படுத்துவதற்கான கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, சென்னை நோக்கி சென்ற வாகனங்களை விசாரித்து உரிய அனுமதியுடனும், அவசர தேவைக்காக செல்லும் வாகனங்களை விசாரித்து ஆய்வுக்கு பின்னர் செல்ல அனுமதித்தனர். மேலும், ஆம்புலன்ஸ், பால், உணவு பொருட்கள், சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தங்குதடையின்றி செல்ல அனுமதித்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil