சுங்கச்சாவடியில் போலீசார் கண்காணிப்பு

சுங்கச்சாவடியில் போலீசார் கண்காணிப்பு
X
ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் உள்ளதா என போலீசார் கண்காணிப்பு.

கொரோனா பெரும் தொற்று காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்களில் முறையான ஆவணங்கள் உள்ளதா என போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இரு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் இருசக்கர வாகனம் கார் மற்றும் கனரக வாகனம் போன்றவை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் 95% சதவிதம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் சில வாகனங்கள் மட்டுமே செல்கின்றது.

இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பபடுகின்றன. இ.பாஸ் உள்ள ஒரு சில வாகனங்கள் மட்டுமே செல்கின்றன. முகக் கவசம் அணியாதவர்களை அச்சிறு பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீஸார் வெளியே செல்லக்கூடாது என எச்சரித்து அனுப்பப்பட்டனர். செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியில் பெருமளவில் வாகனப் போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself