படாளம் பகுதியில் வீடு எடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

படாளம் பகுதியில் வீடு எடுத்து  கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது
X

படாளத்தில் மொத்த கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்

மதுராந்தகம் அருகே படாளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா மொத்த விற்பனையில் ஈடுபட்டு வந்த 11 பேர் கொண்ட கும்பல் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இரு சக்கர வாகனம், ஒரு கார், ஒரு மினி சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர்கள் ஆந்திரா தமிழகம் பாண்டிச்சேரி கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு மொத்தமாக கஞ்சா விற்பனை செய்து வந்தது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சங்கர், ராமுடு,மற்றும் கார்த்திக், பவுன்குமார், சதீஷ்குமார், பூமிநாதன், விஜயகுமார், சுபாஷ், சங்கர், சையத் முகமது இப்ராஹிம் ஆகிய 11பேரை கைது செய்துள்ளனர்.

இவர்கள் எந்த பகுதியில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி மொத்த விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் என நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் செங்கல்பட்டு ஏஎஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 60 கிலோ கஞ்சா எந்தெந்த பகுதிக்கு கொண்டு செல்லப் படுகிறது என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business