பாமகவினர் தேமுதிகவினர் மோதல்: 7 பேர் படுகாயம் ஒருவர் கவலைக்கிடம்

பாமகவினர் தேமுதிகவினர் மோதல்: 7 பேர் படுகாயம் ஒருவர் கவலைக்கிடம்
X

பைல் படம்.

பாமகவினர் தேமுதிகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயம், ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதி.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே எடையாளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பா.ம.க மாவட்ட செயலாளர் குமரவேல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டு, தேமுதிக கட்சியை சேர்ந்த அச்சிறுப்பாக்கம் ஒன்றிய அவைத்தலைவர் பெருமாள் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் பெருமாளுக்கு ஆதரவாக செயல்பட்ட பொதுமக்களை குமரவேல் ஆதரவாளர்களான அன்பழகன், ஜானகிராமன், பிரசாந்த், முருகன், சண்முகம், பூமிநாதன், தாமோதரன், சரவணன், மோகன், அசோக் குமார், அருணகிரி மற்றும் 15க்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்டு செல்லக்கண்ணு துரை, ஆனந்தன், மணிமாறன், ராமன், மோகன், பெருமாள் இவர்கள் ஏழு பேரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஜார் வீதியில் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். மணிமாறன் கவலைக்கிடமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமறைவாகியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பாமகவினர், தேமுதிகவினர் தாக்கி கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அச்சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்