/* */

மதுராந்தகம் பள்ளியில் செல்லப் பிராணிகள் வளர்ப்பு நாள் கொண்டாட்டம்

செல்ல பிராணிகள் வளர்ப்பது மற்றும் பராமரிப்பது குறித்து தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

மதுராந்தகம் பள்ளியில் செல்லப் பிராணிகள் வளர்ப்பு நாள் கொண்டாட்டம்
X

 மதுராந்தகதில் ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடந்த செல்லப்பிராணிகள் தினம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகதில் ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் செல்லப்பிராணிகள் வளர்ப்பு மற்றும் அவைகளைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அவர்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய், பூனை, ஆடு,கோழி, முயல், பல்வேறு வகையான பறவைகள், மீன்கள் உள்ளிட்டவைகளை கொண்டுவந்து மற்ற மாணவர்களுக்கு காட்சிப்படுத்தினர். மேலும் எந்தெந்த செல்லப் பிராணிகள் எந்த வகையான உணவுகள் உட்கொள்ளும் என்பது குறித்தும் பிராணிகளை எவ்வாறு கையாளுவது மற்றும் அவைகளை எவ்வாறு பராமரிப்பது குறித்து மாணவ மாணவிகள் எடுத்துரைத்தனர்.

Updated On: 28 Feb 2022 1:45 AM GMT

Related News