பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோவிலில் அன்னதானம்

பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோவிலில்  அன்னதானம்
X

பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோவிலில் பொதுமக்களுககு அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரும்பேர்கண்டிகை எல்லையம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கல்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பெரும்பேர்கண்டிகை எல்லையம்மன் திருக்கோயிலில் தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி அன்னதானம் வழங்குவது தொடங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுதல்படி பெரும்பேர்கண்டிகை எல்லையம்மன் திருக்கோயில் சார்பாக கோயில் செயல் அலுவலர் சரஸ்வதி, கோயில் சங்கர்சிவாச்சாரியார், குருக்கள் திருமலை, திருக்கோயில் எழுத்தர் பூபதி, ஆகியோர் முன்னிலையில் காய்கறி கலவை உணவுகள் வீடற்ற ஏழைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 பேருக்கு கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai solutions for small business