மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா

மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா
X

மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் உரிமை நீதி பொதுநலச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்கவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அச்சங்கத்தின் நிறுவனர் மற்றும் தேசியத்தலைவர் சேவாரத்னா எம். ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் வல்லிபுரம் சுரேஷ், தேசிய துணைத் தலைவர்கள் சிவச்சிதம்பரம், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் அமர்நாத் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.இதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மழையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில்,, மாநில, மாவட்ட, நகர ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் செங்கல்பட்டு தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி மணிகண்டன் நன்றி கூறிினார்..

Tags

Next Story
ai marketing future