மதுராந்தகத்தில் மக்கள் நீதி மைய்யம் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தினேஷ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட கடை பகுதிகளில் வாக்கு சேகரிப்புக்கு சென்றார். தினேஷ். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் பஜார் வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரித்தபோது கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். வேட்பாளா் தினேஷ் செய்தியாளா் சந்தித்த போது அவா் கூறுகையில் எனக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்தால் மதுராந்தகம் ஏரி தூர் வாரப்படும்,

அரசு மருத்துவமனைய நவீன முறையில் செய்து தரப்படும் .,விவசாயிகள் பிரச்சினை அனைத்தும் தீா்க்கப்படும், படாளம் சா்க்கரை ஆலை சீரமைக்கபடும் என பல்வறேு வாக்கு உறுதி அளித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!