செங்கல்பட்டு மாவட்டம் படாளம் ஊராட்சி அலுவலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் ஊராட்சி அலுவலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் படாளம் ஊராட்சி அலுவலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சரி செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் ஊராட்சி மன்ற கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மதுராந்தகம் ஒன்றியம் படாளம் ஊராட்சி மன்ற அலுவலகம் சமீப காலமாக பராமரிப்பின்றி காணப்படும் நிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக மேல் மேற்கூரை அவ்வப்போது கீழே விழுந்து கொண்டு இருக்கின்றது.

இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் அலுவலர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த ஊராட்சிமன்ற கட்டிடத்தை சரி செய்து தருமாறு படாளம் ஊராட்சி நிர்வாகத்திற்கும், மதுராந்தகம் ஒன்றிய நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!