செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு : டி.ஐ.ஜி நேரில் ஆய்வு

செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு : டி.ஐ.ஜி நேரில் ஆய்வு
X

செங்கல்பட்டு அடுத்து வள்ளிபுரம் வாயலூர் ஆகிய தரைப்பாலங்களை,  டி ஐ ஜி சத்திய பிரியா இன்று ஆய்வு மேற்கொண்டார். 

செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் டி.ஐ.ஜி சக்தி ப்ரியா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் தரைப்பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளது. இதனால் பல கிராமங்களில் உள்ள மக்கள், அத்தியாவசிய பொருள் வாங்குவதற்கு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வல்லிபுரம், இடையாத்தூர், சிறுசேரி, நெரும்பூர், வாயலூர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரில் குளிக்கவும் அல்லது புகைப்படம் எடுக்கவும் அந்தந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு அடுத்து வள்ளிபுரம், வாயலூர் ஆகிய தரைப்பாலங்களை டிஐஜி சத்திய பிரியா இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளரை சந்தித்த டிஐஜி சக்தி பிரியா, வெள்ளம் அதிகளவில் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் யாரும் போட்டோ செல்பி எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil